by Staff /
10-07-2023
12:40:27pm
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால், பெற்றோர் அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது பரிசோதனையில் அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், வாலிபர் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via