40 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உதவியாளர் கைது..

by Editor / 10-01-2024 10:38:33pm
 40 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உதவியாளர் கைது..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சசிதரன் என்பவரது மகன் ரஜினி பாபு என்பவர் தனது அத்தை மகள் வெளிநாட்டில் கணினி பொறியாளராக பணியாற்றி வரும் வந்தனா என்பவருக்கு சொந்தமாக தென்காசி குத்துக்கல்வலசை ராஜா நகர் பகுதியில் மூன்று சென்ட் நிலம் உள்ளது இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்காக நிலத்திற்கு அனுமதி வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

 நிலத்திற்கு அனுமதி வழங்குவதற்காக குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் அணுகியுள்ளார் அவர் புரோக்கர் சௌந்தர் என்பவர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

இதன் தொடர்ச்சியாக 46 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பேசி 6000 ரூபாய் குறைத்து 40 ஆயிரம் ரூபாய் இன்று ரெஜி நியூஸ் பாபுவிடம் வாங்கி சௌந்தர் என்பவர் தலைவர் சத்யராஜிடம் கொடுக்கும்  பொழுது தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாலசுத்தர் தலைமையிலான ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ உதவி ஆய்வாளர் ரவி உள்ளிட்ட குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் இதில் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவைச் சார்ந்த சத்யராஜ் மற்றும் சௌந்தர் ரெண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : 40 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உதவியாளர் கைது.கைது ஊராட்சி

Share via