பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்- அவரது மனைவி புஷ்ரா பீ பி இருவருக்கும்17ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

by Admin / 20-12-2025 04:44:23pm
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்- அவரது மனைவி புஷ்ரா பீ பி இருவருக்கும்17ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவரது மனைவி புஷ்ரா பீ பி ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டு சவுதி அரேபியா இளவரசர் வழங்கிய விலை உயர்ந்த பல்கேரி நகை தொகுப்பை அதன் சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அரசு கருவூல பரிசுகளை குறைந்த விலைக்கு வாங்கிய ஊழல் வழக்கில் நீதிமன்றம் இவர்களுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கி உள்ளது .நம்பிக்கை துரோகம் செய்ததற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதனோடு 1.64 கோடி பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் ராவல்பிடியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

Tags :

Share via