காற்றாலைகள் மின் உற்பத்தி உயர்வு

by Editor / 08-08-2022 10:21:55pm
 காற்றாலைகள் மின் உற்பத்தி உயர்வு

தமிழகத்தில் நீர் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் குறைந்ததால், ஒட்டுமொத்த அனல் மின் நிலையங்களிலும் நேற்று 90 சதவீதத்திற்கு மேல் இயக்கம் நிறுத்தப்பட்டது. இது அனல் மின் நிலைய இயக்கத்தில் முக்கிய நிகழ்வு என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காற்றாலைகளில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தென்மேற்குப் பருவக்காற்று வீசுவதால், காற்றாலைகளில் தற்போது மின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. இதேபோல், தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டதால், அவற்றில் உள்ள நீர் மின் நிலையங்கள் மூலமாகவும் தற்போது மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
 

 காற்றாலைகள் மின் உற்பத்தி உயர்வு
 

Tags :

Share via

More stories

Logo