கடலோர மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

by Staff / 30-12-2023 02:29:42pm
கடலோர மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று  கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

Tags :

Share via