ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்

by Staff / 03-03-2024 01:14:55pm
ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்துபோதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories