5 லட்சம் ரூபாய் வரை அபராதம்- கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்தால் புதிய மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல்

தமிழக சட்டப்பேரவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கிகள் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதற்கு எதிரான புதிய மசோதாவை தாக்கல் செய்தார்.. இம் மசோதாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள் ,மகளிர் சுய உதவிக் குழுக்கள் விவசாயக்கோழி தொழிலாளர்கள் பணியாளர்கள் நடைபாதை வியாபாரிகள் பால்பண்ணை தொழிலாளர்கள் கட்டிட பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆகியோர் பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படும் கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆட்படுகின்றனர். மேலும் பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கனவே நிதிச் சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக முறையற்ற வழியை நாடுகின்றனர். கடனாளிகளை தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாய் அமைந்து விடுகின்றது. எனவே கடன் வழங்கும் நிறுவனங்களில் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றுவது அவசியமாகிறது .அதற்கான சட்டத்தை ஏற்ற அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை அறிமுகம் செய்கிறது. இந்தச் சட்டம் வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரார் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்., ஆனால் ,,கடன் வாங்கிய அவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால் வங்கிகளுக்கும் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரார் நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்., கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர் கணவர் அல்லது மனைவி குழந்தைகள் ஆகியோரை கடன் வாங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது. அந்த வகையில் அவர்களுக்கு இடையூறு விளைவித்தல் வன்முறையை பயன்படுத்துதல் ,அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகும் இடங்களில் பின்தொடர் அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துக்களின் தலையிடுதல் அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துக்களை பறித்துக் கொள்ளுங்கள் அவரது வீடு வசிக்கும் இடம் வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது பேச்சுவார்த்தை நடக்க அல்லது கடனை வசூலிக்க தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்த தனியார் அல்லது வெளி தரப்பு முகவைகளின் சேவைகளை பயன்படுத்துதல் அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள் பிற முக்கிய ஆவணங்கள் பொருள்கள் வீட்டு உடைமைகளை வலுக்கட்டாயமாக இருக்க கூறுகள் போன்றவை வலு கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும் இந்த இருபதாவது பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல் பின்தொடர்கள் போன்ற குற்றங்களை செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து பயன்படுத்துதல் ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக ஐந்து ஆண்டுகள் அல்லது ரூபாய் 5 லட்சம் அவராகம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது தற்கொலை செய்து அது கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹா 108 வது பிரிவின்கள் குற்றமாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :