சின்னதாய் சிலவரி செய்திகள்...

by Editor / 21-11-2021 07:30:44pm
சின்னதாய் சிலவரி செய்திகள்...

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட  '1098' என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்"உதவிகளுக்கு '89033 31098' என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் - கரூர் ஆட்சியர்"


"பொது சுகாதாரத்துறையின் விதிகளின் படி பொது இடங்களில் வருவோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது"தடுப்பூசியை வீணாக்காமல், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


சென்னை, ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை. சென்னை மாநகராட்சியில் வெள்ளை பாதிப்பு குறித்து வைக்கப்பட்டு உள்ள புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.


நெல்லை டவுண் தர்மராஜா கோவில் தெருவில் வசிக்கும் நடராஜன் ( வயது 63 ) தனது நிலத்தில் ஆட்டுக்காக புல்லை அறுத்துக் கொண்டிருக்கும் போது பாம்பு கடித்ததில் உயிர் இழந்தார். இறப்பு குறித்து டவுண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 53 வயதான ஜாகிர் உசேன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கிழக்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு.
தேர்வு மையம் அமைக்க ஏதுவாக கல்லூரிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒதுக்கித்தருமாறு பொறியியல் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு.

சென்னை முழுவதும் உள்ள மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை; தவறான செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்ற கோணத்தில் இந்த சோதனை நடப்பதாக தகவல்,
விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்கள் இருவர் வீட்டில் கடந்தவாரம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.


வெள்ளம் பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்,சென்னை, ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா பேட்டி.
சென்னை: காதலிக்கு கொலை மிரட்டல்: மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற காதலன் கைது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு.

கோவை சரவணம்பட்டியில் இந்து முண்ணனியினர் ஆர்ப்பாட்டம்.சிறுமி பாலியல் வழக்கில் கைதான ஜாகீர்உசேன் என்பவர் மீது குண்டர்தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்.


 

சின்னதாய் சிலவரி செய்திகள்...
 

Tags :

Share via

More stories