6 பேர் தீயில் கருகி பரிதாப பலி

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து நடந்தது. மந்தமரி மண்டலம் வெங்கடாபூர் கிராமத்தில் நள்ளிரவில் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டின் உரிமையாளர் சிவய்யா, அவரது மனைவி பத்மா, பத்மாவின் மூத்த மகள் மௌனிகா, அவரது இரண்டு மகள்கள் மற்றும் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக டிசிபி அகில் மகாஜன் தெரிவித்தார்.
Tags :