சென்னை கனமழை தற்போதைய நிலவரம் தொகுப்பு.
சென்னையில் இரவு முதல் சாரல் மழை மட்டுமே பெய்து வரும் நிலையில் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீரானது.
17 சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து.சென்னையில் 17 சுரங்கப்பாதைகளில் வழக்கம்போல் போக்குவரத்து.
கணேசபுரம், ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை, பெரம்பூர் 3 சுரங்கப்பாதைகள் மூடல் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்.
இந்தியன் வெல்ஃபேர் பவுண்டேஷன் மற்றும் வியாசை தோழர்கள் என்ற அமைப்பு இணைந்து, சென்னை வியாசர்பாடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 450க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடைக்கலம் தேடிய நபர்களுக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது
வேளச்சேரியில் ராம்நகர், ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட் பகுதிகளில் நேற்று மாலை மழை நீர் தேங்கி இருந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்துள்ளன. இந்த பகுதிகளில் நேற்று மாலை படகுகள் மூலமாக மக்களை மீட்டனர்.
கோடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடிந்துள்ளது.இரவு முதல் மழை குறைந்ததால் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்.
சென்னையில் நேற்று பெய்த அதீத கனமழை இன்று இருக்காது; கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
மேகக் கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால் சென்னையில் பெருமழை இல்லை,
-தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
Tags : சென்னை கனமழை தற்போதைய நிலவரம் தொகுப்பு.