மதச்சார்பின்மையை சீர்குலைக்க சிலர் முயற்சி: பினராயி விஜயன்
கேரளாவில் மதச்சார்பின்மையை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (CUSAT) கேரள மாநில உயர்கல்வி கவுன்சில் ஏற்பாடு செய்த ஒழுங்குமுறை தேசிய மாநாடு மற்றும் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “எங்கள் பிள்ளைகள் கேரளாவை விட்டு உயர்கல்விக்காக வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சிலர் டெல்லிக்குச் சென்று படிக்கிறார்கள். ஆனால், டெல்லிக்கு மிக அருகில் உள்ள ஹரியானாவில் இருந்து மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நிகழ்வுகளும் உள்ளன. மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களுக்குச் செல்வார்கள். இருப்பினும், உயர் கல்விக்காக அதிக கல்வி நிறுவனங்களை அமைப்பதில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.இது எல்லா வகையிலும் மதச்சார்பின்மை நிலவும் மாநிலம். சிலர், இங்கே, இதைத் தகர்க்கப் பார்க்கிறார்கள். மதச்சார்பின்மையில் ஒட்டிக்கொண்டு அறிவியல் சார்ந்ததாக இருக்க முயற்சிக்கிறோம்," என்றார்.
Tags :