தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து படகுமூலம் கஞ்சா பீடி இலை உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில் கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தூத்துக்குடி கியூ பிரிவு உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது புல்லா வெளி கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியை கியூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் பீடிஇலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் டன் பீடி இலை மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :