மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு நடவடிக்கை எடுக்க காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு

by Admin / 25-03-2023 01:24:49pm
 மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு  நடவடிக்கை எடுக்க காவல்  துறைத் தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு

சென்னையில், அடையாறு  சாஸ்திாி நகாில் இயங்கி வரும் கலாசேத்ரா அறக்கட்டளையின்  ருக்மணி தேவி கவின் கல்லூரி உள்ளது.   இக்கல்லூரியில்  நூற்றுக்கணக்கான   மாணவிகள்  பரத  நாட்டியம், உள்ளிட்ட கலைகளைப் பயின்று   வருகின்றனா்.   இந்த  கல்லூரியில்  பணியாற்றி  வரும்   மூத்த  பேராசிரியர்    மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு  கொடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள்  வந்தன  இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம்  இது குறித்து  நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையை தலைவருக்கு புகாரளித்தது.  இப்  புகார்  தொடர்பாக  விசாரணை  நடத்தி  நடவடிக்கை  எடுக்குமாறு  தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ,சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு உத்தர விட் டுள்ளார்   இந்நிலையில், மாணவி ஒருவர் தன்னுடைய பெயரில் சமூக வலைத்தளங்களில் வரும்  பாலியல் தொடர்பான செய்தி தவறானது என்றும் அது போல் தனக்கு எந்த விதமான நிகழ்வுகளும் நடக்கவில்லை என்றும் சாஸ்திரி நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்  இந்த மாணவினுடைய புகாரை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு  நடவடிக்கை எடுக்க காவல்  துறைத் தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு
 

Tags :

Share via

More stories