படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட குணா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.படப்பை குணாவை கைது செய்ய போலீசார் முடிவெடுத்தனர். இதனை அறிந்து படப்பை குணா தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
Tags : Rowdy Padappai Guna surrenders before Saidapet Court