சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு 3700 சிறப்பு பேருந்துகள்

by Editor / 21-09-2022 11:17:32pm
 சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு 3700 சிறப்பு பேருந்துகள்

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானது சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை பண்டிகைகைகள்,இந்த பண்டிகைகளை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் சொந்தஊர்களுக்கு செல்லும் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் ஆகியவை தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் (மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில்) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களுக்கு கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து  சிறப்பு பேருந்துக்கள் இயக்கபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via