அமெரிக்காவின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்த ரஷ்யா

by Admin / 01-02-2022 12:05:02pm
அமெரிக்காவின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்த ரஷ்யா

உக்ரைன் மீதான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா - ரஷ்யா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினைகளும் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. 

மேலும், உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா கருதுகிறது. 

இதனால் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களுடன் தனது படைகளை குவித்து வருகிறது.  

இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

 

Tags :

Share via