பிரபல ரவுடியாக வலம் வந்த நபர் துப்பாக்கி முனையில் கைது
தாம்பரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த நபர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார் இரும்புலியூர் சேர்ந்த விவேக் என்ற விவேக் மீது காவல் நிலையத்தில் கொலை கொள்ளை ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ள இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வரும் நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றுள்ளார் இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்த விவேக் மற்றும் கூட்டாளி துப்பாக்கி முனையில் கைது செய்தனர். விசாரணையில் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒருவரை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து கொலை செய்வதற்காக இருவரும் திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது. இதற்காக வாங்கிய மூன்று புதிய பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags :



















