துணை முதல்வர் பதவி: முதல்வர் விளக்கம்...

by Staff / 13-01-2024 05:24:37pm
துணை முதல்வர் பதவி: முதல்வர் விளக்கம்...

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்க உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்திதான் என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். பரபரப்புக்காக, துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருக்கிறது என வதந்தியை பரப்ப தொடங்கினர்; வதந்திகளை பரப்பி பிழைப்பு நடத்துவோர் என் உடல்நிலை குறித்தும் பொய் தகவல்களை பரப்பி பார்த்தனர்; அது எடுபடவில்லை. நான் நலமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via