ஆன்லைன் சூதாட்டத்தில் ஆசிரியர் தற்கொலை - அன்புமணி வலியுறுத்தல்

by Staff / 05-01-2024 05:06:55pm
ஆன்லைன் சூதாட்டத்தில் ஆசிரியர் தற்கொலை - அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை, தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து கடனாளியான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via

More stories