வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய நீலகரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9 மற்றும் 10ம் தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வட மேற்கு மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு விவரம் வருமாறு:சின்னக்கல்லார், செந்துறை தலா 7 செ.மீ., மகாபலிபுரம் 6 செ.மீ., சேலம், சேந்தமங்கலம், வேதாரண்யம் தலா 5 செ.மீ., ஈரோடு , புவனகிரி, வால்பாறை, தேன்கனிக்கோட்டை, மரக்காணம் தலா 4 செ.மீ., ஜெயம்கொண்டம், சென்னை தரமணி, சங்கராபுரம், சீர்காழி, தேவலா , அகரம் சீகூர், பேச்சிப்பாறை, நாமக்கல் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags :