மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் 8 மணி நேர தாமதம் பாஜக 8 இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி

by Staff / 11-06-2022 11:56:43am
மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் 8 மணி நேர தாமதம் பாஜக 8 இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி

 மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 8 இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை தலா ஒரு இடத்தை பெற்றுள்ளன.  மாநிலங்களவையில் காலியாக இருந்த 57 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் உள்ளிட்ட நாற்பத்தி ஒரு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகாராஷ்டிரா கர்நாடகா ராஜஸ்தான் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் எஞ்சிய 16 காலியிடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா ஹரியானாவில் எழுந்த புகார்களை அடுத்து வாக்கு எண்ணிக்கை எட்டு மணி நேர தாமதம் ஆனது அதிகாலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்நாடகத்தில் உள்ள 4 இடங்களில் பாஜக மூன்று இடங்களிலும் வென்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றிபெற்று மாநிலங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . மேலும் இரண்டு பாஜக வேட்பாளர்கள் வெற்றி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெயராம் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார். ஹரியானாவில் பாஜக ஒரு இடத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அஜய் மக்கான் தோல்வியை தழுவினார். மகாராஷ்டிராவிலும் சிவசேனா தலைமையிலான கூட்டணி பலத்தை தாண்டி பாஜக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது . ராஜஸ்தானில் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் கட்சி மாறி வாக்களித்து அடுத்து அடுத்து காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது வேட்பாளர் வெற்றி பெற்றார் பாஜக ஆதரவு பெற்ற சுபாஷ்சந்திர தோல்வியை தழுவினார்.

 

Tags :

Share via