இளம்பெண்ணின் முகத்தில் பாட்டிலால் 25 கீறல் - அதிர்ச்சி

by Staff / 17-11-2022 01:37:24pm
இளம்பெண்ணின் முகத்தில் பாட்டிலால் 25 கீறல் - அதிர்ச்சி

கேரள மாநிலம் ஆம்பூரி கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு (20). இவர், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கும் சோனுவுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பு ரீதியாக பேசி வந்த நிலையில், நவீன் சோனுவை காதலிப்பதாக தெரிவித்தார். நட்பாக பழகியதை நவீன் தவறாக புரிந்துகொண்டதால் சோனு, கொஞ்சம் கொஞ்சமாக நவீனை விட்டு விலகியுள்ளார். இது நவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சோனுவுக்கு போன் செய்து நவீன் மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில், காதலிக்க வற்புறுத்தி மறைத்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்திலும், கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக குத்தினார். சோனுவின் முகத்தை சிதைக்கும் எண்ணத்தில் பல இடங்களில் குத்தினார். மிகவும் மோசமான நிலையில் சோனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவீனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo