ஈழத் தமிழர்களை ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ் - திருமாவளவன்

சென்னையில் ,இலங்கை தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைக் கட்சித்தலைவர் திருமாவளவன், " ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம், கருணாநிதி மற்றும் திமுக தான் என்று கூறினால் , அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம், ஆனால், ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது.. ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தி.மு.கவையும், கருணாநிதியையும் மட்டுமே குறை கூறினார்கள், ஆனால், உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை. ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான்" என்று கூறினார்.
Tags :