குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஜெய்பூர் செளவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி தம் சொந்த மண்ணில் 16 . 3 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.
Tags :



















