தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு பரபரப்பு.

மத்திய அரசு வக்பு மசோதாவை திரும்ப பெறக்கோரி தவெக சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தவெகவினர் வருகை தந்த நிலையில், பேருந்து பணிமனை எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு மாற்று இடம் தருவதாகக் கூறியும் தவெகவினர் ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தவெகவினரை தடுக்க முயற்சிப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு பரபரப்பு.