தென்காசி மாவட்டத்தில் கன மழை குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்

by Editor / 28-11-2021 06:06:39pm
தென்காசி மாவட்டத்தில் கன மழை குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம்

தென்காசி மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவிவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர். குற்றாலம் மெயினருவியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி பஜார் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.வியாபாரிகள் கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடங்களில் தங்களது பொருட்களை பாதுகாத்து வருகின்றனர்.இதன்காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இலஞ்சி குமரன் கோவில் ஆற்றுபாலம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories