பாபநாசம்,சேர்வலாறு,கடனா நீர்த்தேக்கங்களில் இருந்து 11990 கன அடி நீர் வெளியேற்றம்.வெள்ள அபாய எச்சரிக்கை
நெல்லை,தென்காசி உள்ளிட்ட பகுதிகளை உள்ளிடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தினுடைய பெரிய நீர்த்தேக்கமான கடனாநதி நீர் தேக்கம் நிரம்பி வழியத் தொடங்கி உள்ளது, மேலும் நீர்த்தேக்கம் நிரம்பி 5500 கன அடி நீர் நொடிக்கு வெளியாகி வருகின்றது. இதன் காரணமாக பாப்பாங்குளம்,ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், கருத்தபிள்ளையூர் பகுதிகளின் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதேபோன்று ராமநதி நீர்த்தேக்கம் நிரம்பி 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது, என பொதுப்பணித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து 7 மணி நிலவரப்படி 7390 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.மொத்தமாக இரு அணைகளில் இருந்தும் தாமிரபரணி ஆற்றில் 11990 கன அடி நீர் வெளியேற்றம்.மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளமும் தாமரபரணி ஆற்றில் இணைந்து வருவதால் பொதுமக்கள் ஆற்றங்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :