காவல்துறை பெண் ஆய்வாளர் வீட்டில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி (முன்னாள் தனிப்பிரிவு ஆய்வாளர் ) வசித்து வரும் பாலசுப்பிரமணிய வீதி, கீழ ராமன்புதூர், நாகர்கோவில் வீட்டில் தற்போது அதிரடி சோதனை நடந்து வருகிறது. இவருடைய கணவர் சேவியர் பாண்டியன் குமரி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட ஏ,டி,பி யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் இவருடைய தோழி அமுதா தங்கியிருக்கும் மீனாட்சி கார்டன் மீனாட்சிபுரத்தில் உள்ள வீட்டிலும் தற்போது சோதனை நடந்து வருகிறது.
2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் மத்திய அரசின் விருதுக்குத் தேர்வு செய்யபபட்டனர்.இதில் காவல் ஆய்வாளர் கண்மணிக்கும் இந்த விருதுஅறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : Police female inspector home bribery raid