தூத்துக்குடி சிறப்பு ரயில்: முன்பதிவு தொடக்கம்

by Staff / 09-07-2023 01:13:29pm
தூத்துக்குடி சிறப்பு ரயில்: முன்பதிவு தொடக்கம் தூத்துக்குடி பனிமய மாதா கோயில் தங்கத்தேர் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 5, 6ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு ரயில் திரும்பும். இந்த சிறப்புக் கட்டண ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. மேலும் இந்த ரயில் கூடுதலாக அரியலூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. <br /> &nbsp;
 

Tags :

Share via