உதயநிதி அமைச்சராவது என்னுடைய ஆசை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆசை
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை கழக தலைவராக வருவதற்கு கட்டியம்போடுகிற நிகழ்வுகள்தான் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உதயநிதி அமைச்சராவது என்னுடைய ஆசை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆசை என்றும், இதுகுறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தபோது, முதலில் தமிழ் மக்களுக்கு உதயநிதி என்ன செய்வார் என்று பார்க்கிறேன். பிறகு அமைச்சர் ஆகலாம் என்று சொல்லிவிட்டதாக அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
Tags :