மாடியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை..

by Staff / 18-11-2023 04:38:06pm
மாடியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை..


சென்னை போரூர் பைபாஸ் சாலையில் உள்ள, 15 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு, நேற்று முன்தினம் மாலை, 60 வயது மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். 15வது மாடிக்குச் சென்ற அவர், திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்தார்.போரூர் போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் லதா, 60, என்பதும், போரூர், மதனந்தபுரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரிந்தது. அவரது வீட்டில் சோதனை செய்த போது, லதா எழுதி வைத்த கடிதம் சிக்கியது.அந்த கடிதத்தில், 'கணவர் இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன. என் மகன், லண்டனில் உள்ளார். பல ஆண்டுகளாக தனிமையில் உள்ளேன். உறவுகள் பல இருந்தும், என்னை கவனிக்க ஆள் இல்லை. மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்கிறேன்' என எழுதப்பட்டிருந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories