நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் (80 உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த 8ஆம் தேதி வீட்டில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. பாஜகவின் மூத்த தலைவராக இருந்த இல.கணேசன், மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
Tags : நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் தனியார் மருத்துவமனையில் காலமானார்.