ஆக்லாந்த் மக்களுக்கு எச்சரிக்கையோடு இருக்க அரசு அறிவுறுத்தல்.
நியூசிலாந்தின் வடக்குத் தீவினையும் வனுவாட்டு மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளையும் இது கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில், கேப்ரியல் புயல் கடற்கரையை நெருங்குகிறது. புயல் காரணமாக மிகப்பெரிய நகரமான ஆக்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றை சமாளிக்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஆக்லாந்து மற்றும் மேல் வடக்கு தீவு முழுவதும் பல பள்ளிகள் மற்றும் உள்ளூர் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டது. மேலும் மக்கள் முடிந்தால் பயணம் செய்ய வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Tags :



















