தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

by Editor / 14-04-2025 10:25:42am
தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களில் இன்று (ஏப்., 14) நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளின் மராமத்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு ரூ.8,000 தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்குகிறது. வருகிற ஜூன் 14ஆம் தேதி வரையிலான, 61 நாட்கள் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். சிறிய கட்டுமர மீனவர்கள் மட்டும் கடலில் சிறிது தூரம் சென்று மீன் பிடித்து வருவார்கள். இதனால் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படும்.

 

Tags : தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

Share via

More stories