காதலனை விஷம் வைத்து கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை.
கேரளாவில் ஜூஸில் விஷம் வைத்து காதலனை கொலை செய்த இளம்பெண் கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில், கிரிஷ்மா கடந்த 2022 அக்.14ஆம் தேதி தனது காதலன் ஷாரோன் ராஜ்க்கு ஜூஸில் விஷம் கொடுத்தார்.இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் 10 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.நான் படிக்க வேண்டும், என்னை விட்டுவிடுங்கள் என கிரிஷ்மா கோர்ட்டில் கதறி அழுதார்.கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் மாமனுக்கு 10 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை.
Tags : காதலனை விஷம் வைத்து கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை.
















.jpg)


