இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மறுபுறம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் (322 மைல்) கீழேயும் இருந்ததாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்கு முன் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. எனினும் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
Tags :