பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான அனுமதி நேரம் நீட்டிப்பு-மாவட்ட ஆட்சியர் அதிரடி

by Editor / 03-07-2024 11:48:07pm
பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான அனுமதி நேரம் நீட்டிப்பு-மாவட்ட ஆட்சியர் அதிரடி

பழைய குற்றால அருவியில் நேர கட்டுப்பாட்டில் மாற்றம்... மது அருந்திவிட்டு குளிக்க தடை... ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி... பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பலியான நிலையில் பழைய குற்றால அருவியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. 

இதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடத்தில் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் பழைய குற்றால அருவி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளவாறு 

இதற்கு முன்னர் காலை 6:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை மட்டுமே பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது காலை ஆறு மணி முதல் இரவு 8:00 மணி வரை குளிக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அருவி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மது அறிந்து அருவி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மது அருந்திவிட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பழைய குற்றாலம் அருவி விபத்திற்கு பின் ஆட்டோக்கள் அருவி பகுதியில் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆட்டோக்கள் பழைய குற்றால அருவியின் பிரதான வாயில் வரை சென்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை இறக்கி விடவும் ஏற்றி  இறக்கி விடவும் ஏற்றி வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழைய குற்றால அருவி குறித்த அறிவிப்பினை தற்போது மாற்று வெளியிட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.

 

Tags : மாவட்ட ஆட்சியர் அதிரடி

Share via