திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் - நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கடந்த 10 ம் தேதி திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முறையீடு செய்யப்பட்ட நிலையில், நிபந்தனையின் நாகர்கோவில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தினம் இருமுறை நாகர்கோவில் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்து இட உத்தரவுபிறப்பிக்கப்பட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
Tags : திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் -