விஜயின் மீது அண்ணனாக நான் வைத்திருக்கும் அன்பில் குறைவில்லை, அவரது கோட்பாடு தவறு-சீமான் பேட்டி
தவெக தலைவர் விஜயின் மீது அண்ணனாக நான் வைத்திருக்கும் அன்பில் குறைவில்லை, அவரது கோட்பாடு தவறு என்பதால் அண்ணனாக அதை மாற்ற கூறுகிறேன் இதனை ஏற்பதும், ஏற்காததும் அவர் விருப்பம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
தென்காசியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நிலையில் கடையநல்லூர் தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
திமுக அரசு சேவை அரசியலோ, செயல் அரசியலோ செய்யவில்லை மாறாக செய்தி அரசியலை செய்து வருகிறது. அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து விளம்பரங்களை அதிக அளவில் வெளி வருகிறது. அந்த வகையில் நல்ல காலம் பிறக்கிறது! நல்ல காலம் பிறக்கிறது! என குடுகுடுப்புகாரனை போல பேசி வருகின்றனர்.
கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது கூட்டணி வைப்பதால் தனித் தன்மை இலக்க நேரிடும். தற்போது கூட்டணி உள்ளவர்கள் எஜமானர் கோபித்துக் கொள்வார்களோ என தவறும் என தெரிந்து பேச முடியாமல் தவிப்பதாக கூறினார்.
தம்பி விஜய் மீது தான் வைத்திருக்கு பாசம் காரணமாகவே அண்ணனாக அவர்மிது இருக்கும் அன்பில் தனக்கு துளியம் குறைவில்லை, அவரது கொள்கையை மட்டுமே எதிர்கிறோம்.விஜய் சொல்லக்கூடிய கொள்கை கோட்பாடு தவறு உள்ளதால் ஒரு அண்ணனாகவும் அரசியலில் அவருக்கு முன்பாக பயணிப்பதால் இது சரி இல்லை அதனை மாற்று என கூறுகிறேன்.அந்த வகையில் தம்பி விஜய்க்கு அண்ணனாக சொல்ல வேண்டியது எனது கடமை இதை அவரது ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவர் விருப்பம் என தெரிவித்தார்.
Tags : விஜயின் மீது அண்ணனாக நான் வைத்திருக்கும் அன்பில் குறைவில்லை, அவரது கோட்பாடு தவறு-சீமான் பேட்டி



















