5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.

by Editor / 15-10-2023 11:00:18am
5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைய இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.

Share via

More stories

Logo