பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை - வைகோ திட்டவட்டம்

by Editor / 01-08-2025 01:40:39pm
பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை - வைகோ திட்டவட்டம்

பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் எந்த காலத்திலும் மதிமுக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக கூட்டணி வலுவாகவும், பொலிவாகவும் இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.
 

 

Tags :

Share via