மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த டிப்பர் லாரி டிரைவர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த டிப்பர் லாரி டிரைவர் கைது
கயத்தாறை சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மாரிமுத்து (27) என்பவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தாராம்.
இது குறித்து அப்பெண் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததையடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கயத்தாறு வடக்கு தெருவை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :