வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘ரிமல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை கரையை கடக்க வாய்ப்பு.
மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை காலை புயலாக வலுவடைந்தது. இது வங்கதேசத்தின் கெர்புராவிலிருந்து தென்-தென்மேற்கே 750 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து சனிக்கிழமைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கதேசம் மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை ஞாயிற்றுக்கிழமை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘ரிமல்’ புயல்