பெண் தலை நசுங்கி பலி

சென்னை: வேப்பேரியில் மினி சரக்கு வேனில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி (42) என்ற பெண் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மினி சரக்கு வேன் இடித்ததால், அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் ஸ்ரீதேவி தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வேன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :