தைலாபுரம்தான் பாமகவின் தலைமையகம் - ராமதாஸ் அறிவிப்பு

தைலாபுரம்தான் பாமகவின் தலைமையகம் என்றும் பனையூர் அலுவலகம் சட்டவிரோதமானது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்கு புதிய பொறுப்பாளர்களின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. எனது உத்தரவை மீறினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றார்.
Tags :