மகளை கொலை செய்த தந்தை மீது மேலும் ஒரு வழக்கு

சென்னை: பரங்கிமலையில் சதீஷ் குமார் என்பவர் தனது 7 வயது மகளை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டேரி காவல் நிலையத்தில் மனைவி ரெபெக்கா கொடுத்திருந்த புகாரின் பேரில் சதீஷ் குமார் மற்றும் அவரது தாயார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
Tags :