மருத்துவம் பார்க்க வந்த செவிலியரை இழுத்து பாலியல் சீண்டல்! கொரோனா வார்டில் அதிர்ச்சி

by Admin / 08-08-2021 01:33:33pm
மருத்துவம் பார்க்க வந்த செவிலியரை இழுத்து பாலியல் சீண்டல்! கொரோனா வார்டில் அதிர்ச்சி


ஆந்திர மாநிலம் ஓங்கோல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான வார்டில் நோயாளியின் உறவினர் செவிலியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர், சிகிச்சை அளிக்க வந்த செவிலியரிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

அதற்கு அந்த செவிலியர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதலில் சமாதனம் செய்வதை போன்று செவிலியரை அணைத்து, சிகிச்சைக்கு வைக்கப்பட்டிருந்த படுக்கையில் இழுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
 
இதனை பார்த்த வார்டில் உள்ள மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்தனர். இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் செவிலியரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்று குற்றவாளி விஜய்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்

 

Tags :

Share via

More stories

Logo