வினா மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை

by Editor / 01-03-2022 03:29:57pm
வினா மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை

நெல்லையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் கா பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:
குருப் 4 க்கான அட்டவணை இந்த மாத மத்தியில்  வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குரூப்-4 காலிப்பணியிடம் 5ஆயிரம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது கலந்தாய்வு முடிவு பெறும் வரை காலிப் பணியிடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது.டிஎன்பிஎஸ்சி ஆணையம் மீது தேர்வர்களுக்கு நம்பகத் தன்மை அதிகரித்துள்ளது.டிஎன்பிசி தேர்வுகளுக்கு  வினா மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பில்லை,டிஎன்பிஎஸ்சி OTR கணக்குடன் ஆதார் இணைப்பதற்கு கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டது மீண்டும் அதனை நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை என  டிஎன்பிஎஸ்சி தலைவர் கா பாலச்சந்திரன் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo