10 சத மாணவர்கள்  மட்டுமே  செல்போன் படிக்க பயன்படுத்துகின்றனர்  ஆய்வில்  தகவல்

by Editor / 27-07-2021 05:40:27pm
10 சத மாணவர்கள்  மட்டுமே  செல்போன் படிக்க பயன்படுத்துகின்றனர்  ஆய்வில்  தகவல்



10 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே செல்போனை, படிப்பதற்காகப் பயன்படுத்து கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பால் ஏற்படும் பாதிப்புகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 6 மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளை சேர்ந்த 3,491 மாணவர்கள், 1,534 பெற்றோர்கள், 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
62.9 சதவிகித மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்காக தங்களது பெற்றோர்களின் செல்போனைப் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் வகுப்பின்போது 30.2 சதவிகித மாணவர்கள் தங்களுக்கு சொந்தமான ஸ்மார்ட்போனும், 19 சதவிகித மாணவர்கள் மடிக்கணினியும் பயன்படுத்துகின்றனர். 72.70 சதவீத ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் முன் அனுபவம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதில், 10.1 சதவிகித மாணவர்கள் மட்டுமே செல்போனை படிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். 52.90 சதவிகிதம் பேர் வாட்ஸ்அப்பில் சாட் பண்ணவும், முகநூல் பயன்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். 31.90 சதவிகித மாணவர்கள் விளையாட்டிற்கும், 44.10 சதவிகித மாணவர்கள் பாட்டு கேட்பதற்கும், 3.50 சதவிகித மாணவர்கள் யூடியூப்பில் வீடியோ பார்ப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். 10 வயது குழந்தைகளில் 37.8% பேர் முகநூலிலும் 24.3% பேர் இன்ஸ்டாகிராமிலும் கணக்கு வைத்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் கல்வி மாணவர்களின் கற்றல் திறனை பாதித்துள்ளது என்றும் தேவையற்ற காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால், அதற்கான நிலையான வழிகாட்டுதல்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.

 

Tags :

Share via