16 வயது காதலிக்கு வாயில் விஷம் ஊற்றி காதலன்

by Admin / 02-01-2022 12:31:37pm
16 வயது காதலிக்கு வாயில் விஷம் ஊற்றி காதலன்

தூத்துக்குடி அருகே 11ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 16வயது காதலியின் வாயில் விஷத்தை ஊற்றி ஜே சி பி ஓட்டுநர். 
தானும் விஷம் குடித்து  போல தற்கொலை நாடகமாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது .

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சேவல் குளத்தை சேர்ந்த வேல்முருகன் ஜேசிபி ஆப்பரேட்டர் அனா  இவர் அதே ஊரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். 

 மாணவியின் மனதை கேடுத்ததோடு இல்லாமல் அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார் தங்கள் மகள் சிறுமி என்பதை சுட்டிக்காட்டி வீட்டில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் தங்கள் மகளிடம் புத்திமதி கூறியதால் அவர் வேல்முருகன்  காதலை துண்டித்துள்ளார்

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளார் 

தான் படிக்க வேண்டும் என்றும் மீண்டும் காதலிக்க முடியாது என்றும் கூறி சிறுமி மறுத்ததாகவும் கூறப்படுகின்றது 

ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை சிறுமியை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றி குடிக்க வைத்து தானம் குடித்ததாக கூறப்படுகிறது 

உடனடியாக வீட்டிற்கு வெளியே வந்த அந்த சிறுமி விஷ உட்டப்பட்டதைகுறித்து தெரிவித்து மயங்கி விழுந்தாள் 

அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிறுமிக்கு வேல்முருகனுக்கும்   தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் வேல்முருகன் மீது கொலை முயற்சி வழக்கும்  போக்சோ  சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அதே நேரத்தில் படிக்கின்ற வயதில் படிப்பை மறந்து தடுமாறி காதலில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது

 

Tags :

Share via

More stories

Logo